Ad Widget

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடிவாரண்ட்

KN-daklasஇலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குட் எதிரான பிடிவாரண் தொடர்பான வழக்கில் சென்னை போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி அமைப்பின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா சென்னையில் தங்கியிருந்த போது அவரது ஆதரவாளர்களால் 1986-ம் ஆண்டு திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் 1990ஆம் ஆண்டு டக்ளஸ் இலங்கைக்குப் போய்விட்டார்.

இதனால் 1994ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்ட குற்றவாளியாக பிரகடனப்படுத்தப்பட்டார்.

சென்னை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து டக்ளஸ் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அண்மையில் பிடிவாரண்ட் தொடர்பான வழக்கில் தமது மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து டக்ளஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனு மீது 2 வாரத்தில் பதிலளிக்குமாறு சென்னை போலீசாருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Posts