Ad Widget

ஜெயலலிதா, பிரபாகரனை கைதுசெய்ய சொன்னார்: மு.க.ஸ்டாலின்

இலங்கை தமிழர் பிரச்சனையில், போரின்போது பொதுமக்கள் உயிரிழப்பது இயல்புதான் எனக் குறிப்பிட்டவர் ஜெயலலிதான். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்றும் கூறினார்’ என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தமிழக சட்டசபையின் நேற்று இடம்பெற்றது.

இதன்போது, அதிமுக உறுப்பினர் செம்மலை தெரிவித்த கருத்துக்களால் சட்டசபையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

அதன்போது, குறுக்கிட்டுப் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், முதலமைச்சரை ஜெயலலிதா என்று அழைக்கலாமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய செம்மலை, மேகதாது அணை விவகாரம், மீனவர் பிரச்சனை, இலங்கை தமிழர் பிரச்சனையில் சில கருத்துக்களை முன்வைத்தார். அதற்கு அதிமுக அரசு காரணம் அல்ல என்றார்.

அதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், இலங்கை தமிழர் பிரச்சனையில் செம்மலை உண்மைக்கு மாறாக பேசுகிறார். போரின்போது பொதுமக்கள் உயிரிழப்பது இயல்புதான் எனக் குறிப்பிட்டவர் ஜெயலலிதா. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்றும் கூறியவர் ஜெயலலிதா. அதிமுக அரசு நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம்’ என்றார்.

Related Posts