Ad Widget

ஜெயலலிதா சமாதியில் சபதம் செய்த சசிகலா

சரணடைய கால அவகாசம் கேட்டு சசிகலா நடராஜன் சமர்ப்பித்த மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய, சசிகலா இன்று காலை புறப்பட்டார்.

முன்னதாக பெங்களூரு புறப்படுமுன், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று அங்கு அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

ஜெயலலிதா நினைவகத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய சசிகலா , மலர்தூவிய பின், ஏதோ முணுமுணுத்து, மூன்று முறை ஜெயலலிதாவின் சமாதியில் அறைந்து ஏதோ சபதம் செய்ததை தொலைக்காட்சி நேரலைக் காட்சிகள் காண்பித்தன.

மிகுந்த உணர்ச்சி வயப்பட்ட நிலையில் காணப்பட்டார் சசிகலா.

அப்போது அங்கு சிறிய அளவில் கூடியிருந்த அ இஅதிமுக தொண்டர்கள் கூட்டத்தினர் சசிகலாவை ஆதரித்து முழக்கமிட்டனர்.

அவர் என்ன சபதம் ஏற்றார் என்று தெரியவில்லை.

இதற்குப் பிறகு சாலை வழியாக பெங்களூருக்கு புறப்பட்டார் சசிகலா. இதற்காக ஓசூர் வரை சாலைகளில் காவல்துறை பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

Related Posts