Ad Widget

ஜல்லிக்கட்டு போராட்டக் களத்தில் அஜித்?

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தமிழகமெங்கும் பொதுமக்களின் ஆதரவு பெருகி வரும் நிலையில், பிரபலங்களும் சினிமா நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. தமிழர்களின் மரபுசார்ந்த விளையாட்டிற்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் என பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஜல்லிக்கட்டு வேண்டி போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஆதரவும் பெருகி வருகிறது.

மேலும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமலஹாசன், ரஜினி, விஜய், சூர்யா, ஜி.வி.பிரகாஷ், ஹிப் ஹாப் தமிழா ஆதி, சிம்பு, சிவகாரத்திகேயன், தனுஷ், இயக்குநர் அமீர், விக்ரமன், நடிகர் மன்சூர் அலிகான் பாரதிராஜா, தங்கர்பச்சான் என பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முன்னணி நடிகர் நடிகைகள் என பலரும் ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நடிகர் அஜித் ஜல்லிக்கட்டு குறித்து எந்தவித தகவலும் அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில், நடிகர்சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் அஜித் பங்கேற்கப் போவதாக தகவல் வந்துள்ளது. அஜித் தற்போது `தல57′ படப்பிடிப்பிற்காக பல்கேரியாவில் உள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வரும் 20-ம் தேதி நடிகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாக, இலங்கை பிரச்சினையின் போது நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் அஜித் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts