Ad Widget

ஜல்லிக்கட்டு அனுமதி: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் ஓ.பி.எஸ்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதையடத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,’தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த ஏதுவாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

அரசியலமைப்புச் சட்டம் 213-வது பிரிவின்படி குடியரசுத் தலைவரின் வழிகாட்டுதல்கள் பெறப்பட்ட பின்னர் குறித்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இந்த அவசரச் சட்டத்துக்குப் பதிலாக, சட்டப் பேரவையில் கடந்த 23ஆம் திகதி சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பிரணாப் முகர்ஜி நேற்று (செவ்வாய்கிழமை) இதற்கு ஒப்புதல் அளிக்கத்தார்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த உதவியாகவும், உறுதுணையாகவும் இருந்த தங்களுக்கு தமிழக அரசின் சார்பிலும், மக்களின் சார்பிலும் நன்றி.

இதனால், தமிழர்களின் கலாசாரம்-பாரம்பரியம் ஆகியன காக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts