Ad Widget

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் – கோட்டாபய

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாரென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமென தான் நம்புவதாகவும், மக்கள் தயாரென்றால் தேர்தலில் போட்டியிடத் தானும் தயாரென தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் புதிய அரசியலமைப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும், புதிய அரசியலமைப்பு நாட்டை பிளவுபடுத்தும் எனும் அடிப்படையில் இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னர் இலங்கை மக்கள் என்ற அடையாளத்தை மக்களிடத்தில் உணரச் செய்ய வேண்டுமென்றும், அதனடிப்படையில் பிளவுபடாது இலங்கையர்களாக வாழ வேண்டியதன் அவசியத்தை மக்கள் உணர்வார்கள் என்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் சில அரசியல்வாதிகள் இனவாதத்தையும், தேசியவாதத்தையும் தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related Posts