Ad Widget

ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் கால எல்லை கூறமுடியாது -ஆணைக்குழு தலைவர்

வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஆரம்பக் கட்ட விசாரணை அறிக்கை விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் ஆனால் எப்போது வழங்கப்படும் என்று கூறமுடியாது என காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்வெல் பராக்கிரம பரணகம ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

missing-people-president

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணைகள் கடந்த 2, 3,4,5 ஆகிய தினங்கள் நடைபெற்றன.

இறுதிநாளான நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அறிக்கை கையளிப்பு தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஆணைக்குழுவின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஆரம்பக் கட்ட விசாரணை அறிக்கையினை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது இலகுவான காரியம் அல்ல . சாட்சியங்களை அனைத்தும் சரியான முறையில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும், ஒவ்வொரு சாட்சியங்களையும் பரிசீலணை செய்ய வேண்டும் . எங்களுடைய வேலை நேரம் காலை 8.30 முதல் மாலை 5 மணி வரைக்கும் தான் குறித்த நேரத்தில் தான் எங்களாலும் இயன்றளவு செய்ய முடியும் . அத்துடன் விசாரணைகள் தொடர்பில் சட்ட உதவியாளர்களிடம் கையளித்துள்ளோம். அவர்கள் பரிசீலணை செய்த பின்னர் எம்மிடம் ஒப்படைப்பர்.

அதற்குப் பின்னர் ஆரம்பக் கட்ட அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்படும் . எனினும் மிகவிரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று நினைக்கின்றேன் ஆனால் எப்போது வழங்கப்படும் என்று சரியான கால எல்லை கூற முடியாது .

அத்துடன் இம்முறை நான்கு நாள் அமர்விலும் இளம் பிள்ளைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து எடுத்தனர் மற்றும் காயப்பட்டவர்களை இராணுவத்திடம் கொடுத்தோம் என்ற குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. எனினும் அதற்கான ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் கூற முடியாது.

விசாரணைகள் மேற்கொள்ளப்படும். அதுபோல ஆணைக்குழு கால நீடிப்பு செய்யப்பட்டதன் பின்னர் எல்.எல்.ஆர்.சி பரிந்துரையின் கீழ் வருகின்ற ஆணைக்குழுவின் அதிகாரங்களுக்கு அமையவும் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆணைக்குழு மேற்கொள்ளும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts