ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு ஆரம்பம்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று(வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

இதற்கமைய அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட தபால் வாக்காளர்கள் இன்று மற்றும் நாளை வாக்களிக்கவுள்ளனர்.

மேலும் மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தபால் வாக்காளர்களின் தபால் மூல வாக்குப்பதிவு எதிர்வரும் 04ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாத வாக்காளர்கள் எதிர்வரும் 07ஆம் திகதி வாக்களிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தபால் மூல வாக்குப்பதிவினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெளிவுபடுத்தியுள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் இன்று மற்றும் நாளை நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் தலைமையகத்தினால் அனைத்து பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts