Ad Widget

சூர்யாவின் `சி3′ புதிய சாதனை

சூர்யா நடிப்பில் ‘சி3’ படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக திரைகளில் ஓடிவருகிறது. `சிங்கம்’, `சிங்கம் 2′ படத்தின் அடுத்த பாகமாக உருவாக்கியுள்ள `சி3′ படத்தை ஹரி இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யா – அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன்,விவேக், சூரி, ராதாரவி, தாகூர் அனூப் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த 9-ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படம் ரிலீசான 6 நாட்களிலேயே 100 கோடியை வசூலித்து புதிய சாதனையை படைத்துள்ளது.

சூர்யா நடிப்பில் குறைந்த நாட்களில் 100 கோடி வசூலை குவித்த படங்களில் `சி3′ முதலிடத்தை பிடித்துள்ளது. முன்னதாக சூர்யா நடிப்பில் வெளியான `24′ படம் 18 நாட்களில் 100 கோடி வசூலை தொட்டது குறிப்பிடத்தக்கது.

`சி3′ படத்தை, படம் ரிலீசாகும் அதேநாளே இணையதளத்தில் வெளியிடுவோம் என்று குறிப்பிட்ட இணையதளம் சவால் விட்டிருந்தது. கருப்பு பண ஒழிப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களுக்கு இடையே வெளியான `சி3′ படம் நல்ல வசூலை குவித்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைச்துள்ளனர்.

மேலும் `சி3′ பட வெற்றியை சூர்யா தனது படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டினார்.

Related Posts