சுன்னாகம் சந்தியில் நேற்றிரவு வாள்வெட்டு, ஒருவர் படுகாயம்!

val-veddu-knifeசன நடமாட்டம் மிக்க சுன்னாகம் நகரப் பகுதியில் வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாதோரால் வெட்டிக் காயப்படுத்தப்பட்டார்.

இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றது.

சம்பவத்தில் இளவாலை பொலிஸ் நிலைய வீதியைச் சேர்ந்த இராஜரத்தினம் இராஜகுமார்(வயது – 37) என்பவரே படுகாயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

சுன்னாகம் நகர்ப் பகுதியில் வர்த்தக நிலையம் வைத்திருக்கும் குறித்த நபர் தனது கடையைப் பூட்டிவிட்டு நேற்று இரவு 9 மணியளவில் காங்கேசன்துறை வீதியில் நடந்து சென்றுள்ளார்.

இதன்போது முகத்தை துணியால் மூடிக் கட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவரை வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.

சுன்னாகம் பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Posts