Ad Widget

சுன்னாகத்தில் காணாமற்போனவர் மீண்டு வந்த அதிசயம்!

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் காணாமல்போன ஒருவர் தொடர்பில் அம்பாந்தோட்டை நீதிமன்றத்திலிருந்து உறவினர்களுக்கு வந்த ஒரு கடிதத்தால் சுன்னாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் பற்றிய தகவல்கள் ஏதுமற்ற நிலையில் கிட்டத்தட்ட உறவுகளால் அவர் மறக்கப்பட்ட நிலையில் திடீரென அவரை அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடிதம் வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த அழைப்புக் குறித்து உண்மையினை அறிந்து கொள்வதற்கு உறவுகள் அம்பாந்தோட்டைக்கு புறப்பட்டுவதற்கு அவர்கள் தயாராகி வருகின்றனர்.

சுன்னாகம் மத்தியைச் சேர்ந்த க,வைரவநாதன் கொழும்பில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் அதாவது 28வது வயதில் காணமல் போயிருந்தார்.

காணமல் போகும் போது 1991 ஆம் ஆண்டு கொழும்பு ஆமர் வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இவர் காணாமல் போயிருந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் அது தொடர்பிலான தெளிவான தகவல் எதுவும் இல்லை.

அந்தக் காலப்பகுதியில் குடாநாட்டிற்கும் கொழும்பிற்கும் இடையில் நிலவிய போக்குவரத்துச் சிக்கல் காரணமாக உறவுகள் அவரை உடனடியாக தேட முடியவில்லை. இங்கிருந்தபடியே உறவுகள் அவரை தேட எடுத்த முயற்சிகள் யாரும் பயனளிக்கவில்லை.

அவர் காணாமல் போன ஏக்கத்திலேயே அவரது பெற்றோரும் உயிரிழந்து விட்டார்கள். தற்போது அவரது சகோதரர்கள் மட்டுமே யாழ்.மாவட்டத்தில் உள்ளனர். 25 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அவர்களும் வைரவநாதனை மறந்து விட்டனர்.

இன்நிலையில் செவ்வாய் கிழமை திடீரென ஒரு கடிதம் வைரவநாதனின் பெற்றோருக்கு முகவரியிடப்பட்டு வந்துள்ளது. எங்கு தேடியும் முகவரிக்குரியவர்களை கண்டறியாத நிலையில் இறுதியாக கிராம அலுவலரின் உதவி நாடப்பட்டது. அவரது முயற்சியின் பேரில் வைரவநாதனின் உறவினர்கள் கண்டறிப்பட்டு கடிதம் அவர்களிடம் சேர்பிக்கப்பட்டது.

Related Posts