Ad Widget

சி.வி.யை அறிந்தவர்கள் இருவரே!, இந்திய துணைத் தூதுவர்

மாணவர்களுக்கு தங்கள் பாடத்திட்ட கல்வியுடன் பொது அறிவு மிகவும் அவசியமாகவுள்ளதாக யாழ்.இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி தெரிவித்தார்.

india_acting_deputy_commissioner_ds_moorthy

இது தொடர்பில் மூர்த்தி கூறுகையில்,

நீர்வேலியிலுள்ள பாடசாலை ஒன்றிற்கு இன்று புதன்கிழமை (நேற்று) விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தேன். அவ்வேளையில் அங்கிருந்த 150இற்கும் மேற்பட்ட மாணவர்களின் பொது அறிவை சோதித்து பார்க்கும் பொருட்டு, வடமாகாண முதலமைச்சர் யார் என கேள்வி கேட்டேன்.

அதற்கு அங்கிருந்த மாணவர்களில் இருவர் மட்டுமே சி.வி.விக்னேஸ்வரன் என பதில் கூறினார்கள். வேறு எவரும் முதலமைச்சர் யார் என்பது தொடர்பில் அறிந்திருக்கவில்லை. பொது அறிவு விடயங்களை மாணவர்களுக்கு கற்பிக்கும்படி அப்பாடசாலை ஆசிரியர்களுக்கு எடுத்துக்கூறினேன்.

மாணவர்கள் பாடக்கல்வியை எவ்வளது தூரத்திற்கு கற்கின்றார்களோ அந்தளவுக்கு பொது அறிவும் இருக்க வேண்டும். பொது அறிவு மாணவர்களுக்கு அவசியமானதொன்று. மாணவர்களின் பல்தரப்பட்ட அறிவுத்திறன்களை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலைகளுக்கு நூல்களை அன்பளிப்பு செய்து வருவதாகவும் மூர்த்தி மேலும் கூறினார்

Related Posts