Ad Widget

சிவாஜி நடித்த முதல் திரைப்படம் பராசக்தி அல்ல

சிவாஜி நடித்த முதல் திரைப்படம் பராசக்தி என்றுதான் எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் அது உண்மை அல்ல.

sivaji

நடிகர் திலகம் சிவாஜியை சினிமா உலகத்துக்கு அறிமுகப்படுத்திய திரைப்படம் ‘பராசக்தி’. புராண திரைப்படங்களும், பக்தி திரைப்படங்களும் வந்து கொண்டிருந்த நேரத்தில் புரட்சிகரமான கருத்துக்களை பேசிய திரைப்படம்.

தமிழ் சினிமாவின் திருப்புமுனை திரைப்படம். அதில் தி.மு.க தலைவர் கலைஞர் கரணாநிதி எழுதி சிவாஜி பேசிய வசனம் இன்றைக்கும் பிரபலம்.

பராசக்தி திரைப்படத்துக்காக மெலிந்த உடலுடன் இருந்த சிவாஜி 3 மாதங்கள் நன்றாக சாப்பிட்டு வெயிட் போட்டு நடித்தார். அவர் முதன் முதலில் நடித்த இடத்தில் ஏவிஎம் ஸ்டூடியோவில் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது.

சிவாஜி கணேஷன் முதலில் நடித்த திரைப்படம் பூங்கோதை. அப்போது பிரபலமாக இருந்த நடிகை அஞ்சலிதேவி, அஞ்சலி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தெலுங்கு திரைப்படங்களை தயாரித்துக் கொண்டிருந்தார்.

அவர் தெலுங்கு, தமிழில் தயாரித்த திரைப்படம் தான் பூங்கோதை. 1953ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் சிவாஜி ஹீரோ அல்ல.

Poongothai-movie_Poster

அக்கினினேனி நாகேஸ்வரராவ் ஹீரோ, அஞ்சலிதேவி ஹீரோயின். ஆதி நாரயணராவ் இசை அமைத்திருந்தார், எல்.வி.பிரசாத் இயக்கி இருந்தார். பராசக்தி 1952ஆம் ஆண்டே வெளிவந்து விட்டதால் சிவாஜி நடித்து வெளியான முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.

இப்போ சொல்லுங்க சிவாஜி நடித்த முதல் திரைப்படம் எது?..

Related Posts