Ad Widget

‘சிவலிங்கா’ டீசர் வெளியானது

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘சிவலிங்கா’ படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் வெளியானது

பி.வாசு இயக்கத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார் நடிப்பில் உருவான ‘சிவலிங்கா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் இயக்குனர் பி.வாசுவே இயக்குகிறார்.

இப்படத்தில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக ‘இறுதிச்சுற்று’ நாயகி ரித்திகா சிங் நடித்துள்ளார். ஊர்வசி, வடிவேலு, உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இப்படம் புறா ஒன்று கொலை சம்பவத்துக்கு சாட்சி சொல்லும் வகையில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

இப்படத்தில் லாரன்ஸ் சிபிசிஐடி அதிகாரியாக நடித்துள்ளார்.

Related Posts