Ad Widget

சிவகார்த்திகேயன், நயன்தாரா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்

சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், மான்கராத்தே போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் அனிருத். இந்த படங்களில் அனிருத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானதால் தற்போது தனது பிரமாண்ட படமான ரெமோவிலும் அவரையே இசையமைக்க வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

siva-nayan-aniruth

வேதாளம் படத்திற்கு பிறகு தனது மார்க்கெட் மந்தமாகியிருப்பதால் இந்த படத்தின் சூப்பர் ஹிட் பாடல் களை கொடுத்து மீண்டும் பரபரப்பான இசையமைப்பாளராகிவிட வேண்டும் என்று இப்படத்திற்கு அதிகமாக மெனக்கெட்டுள்ளார் அனிருத்

இந்த நிலையில், ரெமோவிற்கு அடுத்தபடியாக மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் படத்திற்கும் அனிருத்தான் இசையமைக்கிறார். தனிஒருவன் படத்தில் இசையமைத்த ஹிப் ஆப் தமிழா ஆதியையே இந்த படத்திற்கும் மோகன்ராஜா இசையமைக்க வைக்க நினைத்தபோதும், அனிருத்திற்கு சிவகார்த்திகேயன் ஸ்ட்ராங்கான ரெகமண்டேசன் செய்ததால் அவரையே இசையமைப்பாளராக்கி விட்டாராம். அதோடு, சிவகார்த்திகேயனுக்கு மூன்று படங்களில் ஹிட் பாடல் கொடுத்த அனிருத், நயன்தாராவுக்கு நானும் ரெளடிதான் படத்தில் ஹிட் கொடுத்தார்.

ஆக, சிவகார்த்திகேயன்-நயன்தாரா ஆகிய இருவருக்கும் முந்தைய படங்களில் கொடுத்ததை விடவும் மோகன்ராஜா இயக்கும் புதிய படத்தில் இன்னும் அதிரடி யான பாடல்களை கொடுக்கப்போகிறாராம் அனிருத். அதோடு, இந்த படத்திற்கான டைட்டீலை இன்று மோகன்ராஜா அறிவிப்பார் என்றும் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் அனிருத்.

Related Posts