சாவகச்சேரி பகுதியில் இருவேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டுகள் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நேற்று வெள்ளிக்கிழமை (29) மாலை செயலிழக்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
சாவகச்சேரி சங்கத்தானை, மற்றும் மறுவன்புலோ பகுதியில் உள்ள இடங்களில் உள்ள காணி உரிமையாளர்கள் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த போது இவை மீட்கப்பட்டன.
நீதிமன்றின் அறிக்கையூடாக அனுமதி பெற்ற பொலிஸார் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் குண்டுகளை செயலிழக்க செய்தனர்.