Ad Widget

சர்வதேச மத்தியஸ்தத்துடன் பேச தயார் : த ஹிந்துவிடம் சம்பந்தன்

13ஆவது திருத்தத்தை செயற்படுத்துவதில் தம்முடன் இணைந்து செயற்பட ஆர்வமாக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, த ஹிந்துவுக்கு கூறியதை, வரவேற்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாம் எந்த நேரத்திலும் பேச தயாராக உள்ளோம். முன்னர் காலவரையரை நிர்ணயிக்கப்படாத நிலையிலிருந்தது. இதனால் பேச்சு வாரத்தையின்போது ஒரு சர்வதேச அவதானி இருக்கவேண்டுமென நாம் விரும்புகிறோம். இதன்மூலம் அவர் தருவதாக கூறுவதை எல்லோரும் அறியமுடியும்.

பொலிஸ் அதிகாரத்தை தவிர்ப்பதை நாம் ஏற்க மாட்டோம். ஏனெனில் கடந்த காலங்களில் வன்முறைகள் இடம் பெற்றபோது, சட்ட அமுலாக்கம் பொறிமுறை செயலற்றிருந்ததையிட்டு தமிழ் மக்களுக்கு உள்ள அச்சமே மோதலுக்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும்.

பொலிஸ் அதிகாரம், சகல அதிகார பகிர்வு ஒப்பந்தங்களிலும் காணப்படுகின்றது. பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதற்காக ஜனாதிபதி இந்தியாவுக்கும் ஐ.நாவுக்கு உறுதியளித்துள்ளார் என சம்பந்தன் கூறியதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

Related Posts