பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பணியாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, புதன்கிழமை (27) உறுதியளித்தார்.
யாழ். அச்சுவேலிக் கைத்தொழிற்பேட்டையின் அங்குரார்ப்பண நிகழ்வு புதன்கிழமை (27) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர், பேட்டையை அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் அங்கு நின்றிருந்த சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது, தாங்கள் களவேலைகளுக்குச் செல்லும் போது தங்களுக்கு மோட்டார் சைக்கிள் அவசிமாகவிருப்பதால் மோட்டார் சைக்கிள் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கோரிக்கை முன்வைத்தனர். இதற்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.