Ad Widget

சட்டவிரோத கடற்பயணம் மேற்கொள்ள முயன்ற இலங்கையர் கைது!

தனுஸ்கோடியிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் படகின் மூலம் பயணம் மேற்கொள்ளவதற்கு முயற்சித்த இலங்கையர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட தமிழக கடலோர பொலிஸ் பாதுகாப்பு படையினரால் நேற்று (வியாழக்கிழமை) குறித்த நபர் கைது செய்யப்பட்டு, தனுஸ்கோடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட குறித்த நபர், கடந்த 2017ஆம் ஆண்டு யுத்தக்காலத்தில் கடவுச்சீட்டு அனுமதியுடன் விமானம் மூலமாக இந்தியா சென்றுள்ளார். அங்கு தனது கடவுச்சீட்டினை தவறவிட்ட அவர் சென்னையிலுள்ள தனியார் நிறுவனங்களில் காவலராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் தனது குடும்பத்தினர் இலங்கையில் உள்ளமையால் அவர்களை சந்திப்பதற்கு பலரிடம் கேட்ட ஆலோசனையின் அடிப்படையிலேயே சென்னையிலிருந்து நேற்று (வியாழக்கிழமை) ராமேஸ்வரம் வந்ததாக குறித்த நபர் பொலிஸாரிடம் தொிவித்துள்ளார்.

மேலும் இலங்கைக்கு செல்வது தொடர்பாக அப்பகுதி மீனவர்களிடம் விசாரித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் சந்தேகம் கொண்ட மக்கள் தமிழக கடலோர பொலிஸ் பாதுகாப்பு படையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். அதனடிப்படையிலேயே பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தனுஸ்கோடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts