Ad Widget

கோண்டாவில் விபத்தில் நால்வர் படுகாயம்!

கோண்டாவில் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து உரும்பிராய் நோக்கி அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த சைக்கிளுடன் மோதி சைக்கிளை சில மீற்றர் தூரம் இழுத்துச் சென்று மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியது.

இதனால் விபத்தில் சிக்கிய சைக்கிள் உடைந்து சின்னாபின்னமானது. இச்சம்பவத்தில் நால்வர் காயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இதில் வேகமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Posts