Ad Widget

கொட்டன்கள் பைப்புகளுடன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள்! ”பெஞ்சும் பெல்ற்றும்” காரணம்!

கடந்த வாரம் தொடக்கம் யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட மாணவர் அணிகளிடையே நடைபெற்று வந்த கருத்து மோதல்கள் பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்கள் கொட்டன்கள் பைப்புகளுடன் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகமெங்கும் ஆர்ப்பரித்து திரியும் அளவுக்கு முற்றியது .காலையில் 4ம் வருட மாணவர்களால் 3ம் வருட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் வைத்து தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டதற்கு பழி தீர்க்கும் வகையில் இன்று (10.9.2015) காலை 10 மணியளவில் ஒரு தொகுதி 3ம்வருட மாணவர்கள் இராமநாதன் வீதி ஊடாக வந்து பல்கலைக்கழகத்தின் மத்திய நுழைவாயில் வழியாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பார்த்துக்கொண்டிருக்க நுழைந்தனர். அந்த வேளையில் பல்கலைக்கழக நுழைவாயில்கள் யாவும் திறந்து வைக்கப்பட்டிருந்தன எந்தவித பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கவில்லை.

uoj

நுழைந்த மாணவர்கள் பிரதான மரத்தின் கீழ் ஆர்ப்பரித்து பின்னர் பல்கலைக்கழக சுற்றுவளையம் வரை முன்னேறிச்சென்று ஆர்ப்பரித்தனர். அதன்போது ஒரு சில 4ம் ஆண்டு மாணவர்கள் தாக்கப்பட்டனர் மோட்டார் சைக்கிள்கள் சிலவும் தாக்கப்பட்டன.பின்னர் வளாகமெங்கும் சுற்றி ஆர்ப்பரித்த பின்னர் வெளியேறினர். அந்த வேளை பொலிசார் வரவே வெளியேறிய மாணவர்கள் இரமநாதன் வீதியில் உள்ள வீடு ஒன்றினுள் ஆயுதங்களை போட்டுவிட்டு பல்கலைக்கழகத்தினுள் நுழைந்தனர்.அதன்போது பொலிசார் மாணவர்களை படம் பிடித்துக்கொண்டனர்.

விரிவுரையாளர்களால் மாணவர்களை கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது. மாணவர் குழுக்கள் அணிகளுக்கிடையே தமது பலத்தினை காட்டுமுகமாகவே இவ்வாறு நடந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதான மரத்தின் கீழுள்ள இருக்கைகளை விட்டுக்கொடுத்தல் , கனிஸ்ட மாணவருக்கு கீழ்ப்படிதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இடுப்புப்பட்டிகளை(பெல்ற்) அணிவதை 3ம் ஆண்டு மாணவர்கள் தடுத்ததும் அதை 4ம் ஆண்டு மாணவர்கள் எதிர்த்ததும் தான் காரணம் என்று கூறப்படுகின்றது. நேற்று முன்தினம் 2ம் வருட மாணவர்கள் இடுப்புப்பட்டி அணிந்தமைக்காக 3ம் வருடமாணவர்களால் விரட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொலிசார் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாகவும் மாணவர் பொறுப்பு விரிவுரையாளர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

இடுப்புப்பட்டி அணிதல் போன்ற சாதாரண உடை அலங்காரம் காலணிகள் தலையலங்கார விடயங்களில் கூட இவ்வாறு மாணவர் அணிகளிடையே கட்டுப்பாடுகள் விதித்தல் அது சம்பந்தமான ராக்கிங் செயற்பாடுகளில் ஈடுபடுதலை அடிப்படையாக கொண்டு மாணவர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் நிலைமை கவலையளிப்பதாகவும் ஆரோக்கியமான மாணவர் சமுதாயத்தினை கட்டியெழுப்புவதிலும் மனித உரிமைகளை மதிக்கும் பண்புகளை வளர்த்துக்கொள்வதிலும் பின்னிற்பதை பலரும் கண்டித்துள்ளனர். இது விடயத்தில் பல்கலைக்கழக நிர்வாகமும் அரசும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமா என்ற கேள்வி தற்போது தொக்கி நிற்கிறது

Related Posts