Ad Widget

‘கேப்டன்’ ஜேக் ஸ்பாரோவை கதிகலங்க வைக்கும் வைரஸ்!

உலக நாடுகளை மிரட்டிவரும் ‘Wannacry ransomware’ எனப்படும் இணைய வைரஸ் ‘பைரட்ஸ் ஆப் தி கரீபியன் – 5’ திரைப்படத்தை ஹாக் செய்து கோடிக்கணக்கில் பணத்தை கேட்டு மிரட்டிவருகிறது.

ஏறத்தாழ 150 நாடுகளுக்கு மேல் இணையத்தின் மூலம் பரவி பன்முனை சைபர் தாக்குதலை நடத்திவருகிறது ‘WannaCry ransomware’ எனப்படும் இணைய வைரஸ். இதுவரை 3 லட்சம் கணினிகளுக்கு மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை’ குறிவைத்து தாக்கும் இந்த வைரஸின் முக்கிய நோக்கமே, கணினிகளை முடக்கி தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவதுதான். பிறகு குறிப்பிட்ட காலத்திற்குள் ‘cryptocurrency’ முறையின் மூலம் தான் கேட்கும் பணத்தை இனைய வழியாக அனுப்பி வைக்கும்படி மிரட்டும் இந்த வைரஸ் மிரட்டும்.

நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணம் செலுத்தாத பட்சத்தில் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் கணினியின் தகவல்கள் முழுவதையும் அழித்திவிடும் அல்லது கணினியில் இருக்கும் தகவல்களை தான் எடுத்து பயன்படுத்திக்கொள்ளும். அந்தவகையில் டிஸ்னியின் தயாரிப்பில் ஏறத்தாழ 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ள ‘பைரட்ஸ் ஆப் தி கரீபியன் – 5’ திரைப்படத்தை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவள்ளது ‘Wannacry ransomware’ வைரஸ்.

இதையடுத்து, டிஸ்னியிடம் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டும் இந்த வைரஸ் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணத்தை அனுப்பாவிட்டால், படத்தை இணையத்தில் வெளியிடுவோம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளது. வரும் 26ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருந்த இப்படத்தைக்காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இப்படம் ‘ஹாக்’ செய்யப்பட்டுள்ளதால் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது டிஸ்னி நிறுவனம்.

Related Posts