குழந்தையை கொன்ற தந்தை சடலமாக மீட்பு

dead-footமருதங்கேணி கட்டைக்காடு, நித்தியவட்டி காட்டுப்பகுதியில் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த மரியதாஸ் மகேஸ்வரன் (28) என்பவரே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;

உயிரிழந்த நபருக்கும், அவரது மனைவிக்கும் கடந்த வெள்ளிக்கிழமை(30) பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தினால் விவகாரத்து வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த நபர் நேற்று சனிக்கிழமை (31) தனது மனைவியிடமிருந்து குழந்தையினை பலவந்தமாக பறித்துச் சென்று, தனது வீட்டிலிருந்து 400 மீற்றர் தொலைவிலுள்ள காட்டுப்பகுதியில் குழந்தையை கொலை செய்ததுடன், தானும் தற்கொலை செய்துள்ளார்.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) காலை விறகு சேகரிப்பதற்காக சென்றவர்கள் குழந்தையொன்றின் சடலமும், ஆண் ஒருவரின் சடலமும் இருப்பதாகத் மருதங்கேணி சோதனைச்சாவடி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பருத்தித்துறை பொலிஸார், குறித்த சடலங்களை நீதவான் முன்னிலையில் மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Posts