Ad Widget

குளிர்பான உற்பத்தியாளர்கள் போராட்டம்

யாழ் மாவட்ட குளிர்பான உற்பத்தி நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியளர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (10) போராட்ட ஊர்வலம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்.மாவட்ட உபஉணவு மற்றும் குளிர்பான உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்று வெள்ளிக்கிழமை (07) தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சங்கத்தினர் கருத்து தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களினால் நடத்தப்பட்ட ஜஸ்கிறீம், யூஸ் மற்றும் உப உற்பத்தி ஆகியவை செய்யும் 59 உற்பத்தி நிலையங்கள் வடமாகாண பிராந்திய சுகாதார பணிமனையினரால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், இந்நிலையங்களில் வேலை செய்த 2500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேரடியாக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தை சந்தித்து இது தொடர்பாக பேசியிருந்தோம்.

மூன்று கட்டமாக பிரித்து படிப்படியாக திருத்த வேலைகளை செய்யுமாறும் பின்னர் வேலைகளை ஆரம்பிக்குமாறும் கூறியிருந்தார். குறைபாடுகளை நிவர்த்தி செய்திருந்தும் மீண்டும் மீண்டும் குறைபாடுகளை கூறி இயங்கவிடாமல் தடுக்கின்றார்கள்.

அதனால் எமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதனால் சம்பந்தப்பட்டவர்கள் இதற்குரிய தீர்வை பெற்று தருமாறு கோரி கவனயீர்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Related Posts