Ad Widget

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதிய ஹாரிபொட்டர் கதைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக, புதிய ஹாரி பொட்டர் கதைகள் வெளியிடப்படும் என்று, எழுத்தாளர் ஜே.கே. ரவுலிங் அறிவித்துள்ளார்.

hareyy-potter

1997 ஆம் ஆண்டு ஹாரி பாட்டர் முதல் புத்தகம் வெளியாகி விற்பனையில் சாதனை படைத்தது. ஹாரி பாட்டரின் நாவலாசிரியர் ஜே.கே ரவுலிங்கும் உலகப் புகழடைந்தார்.

மேலும் 6 பாகங்கள் 2007 ஆம் ஆண்டு வரை வெளியாகி தொடர்ந்து விற்பனையில் புதிய சாதனைகளைப் படைத்தது. புத்தகங்களோடு மட்டுமல்லாமல், ஹாரி பாட்டர் திரைப்படங்கள், வீடியோ கேம், பொம்மைகள், தீம் பார்க் என ஹாரி பாட்டருக்கென தனி உலகம் உருவானது.

ஹாரிபாட்டரின் கடைசி பாகம் 2007 ஆம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து அந்த பாத்திரத்தை வைத்து வேறு எந்த கதைகளும் எழுதப்படவில்லை. தற்போது, டிசம்பர் 12 ஆம் தேதி முதல், 23 ஆம் தேதி இடையிலான 12 நாட்கள் இடைவெளியில், தினம் ஒரு ஹாரி பாட்டர் சிறுகதை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை ஆச்சரியத்தின் ஒரு பகுதியாக இது நடைபெறுகிறது என்று ஜே.கே. ரவுலிங் தெரிவித்துள்ளார். மேலும் Pottermore Christmas என்ற ஹாஷ் டேக்கை ட்விட்டரில் உருவாக்கி, பாட்டர் ரசிகர்கள் பிரபலப்படுத்தி வருகின்றனர்.

Related Posts