Ad Widget

கிராம அலுவலர் மீது தாக்குதல்

attack-attackஉடுப்பிட்டி விறாட்சிக் குளத்தில் அனுமதியின்றி மண் அகழ்ந்தவர்களைத் தடுக்கச் சென்ற தன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஜே – 352 கிராம அலுவலர் நாகரத்தினம் மகாநேசன் திங்கட்கிழமை (04) மாலை முறைப்பாடு செய்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் செவ்வாய்கிழமை (05) தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி குளம் நீரின்றி வற்றியிருக்கும் நிலையில், திங்கட்கிழமை (04) மதியம் உழவு இயந்திரங்களுடன் வந்த சிலர் குளத்தில் அனுமதியின்றி மண் அகழ்ந்துள்ளனர்.

அது தொடர்பாக அப்பகுதி மக்கள் கிராம அலுவருக்கு அறிவித்ததினையடுத்து, கிராம அலுவலர் மண் அகழ்வு நடவடிக்கையினைத் தடுக்கச் செனறுள்ளார். இதன்போது, மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தன்னைத் தாக்கியதாக கிராமஅலுவலர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts