Ad Widget

காணாமற் போனோரின் குடும்பங்களின் தேவையை ஐ.சி.ஆர்.சி மதிப்பிடும்

காணாமற் போனோரின் குடும்பங்களின் தேவை மதிப்பீடொன்றை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி) எதிர்வரும் செப்டெம்பரில் ஆரம்பிக்கவுள்ளது.

வளத் திட்ட வரைபுகள் மூலமாக முன்னேற்றம் தேவைப்படும் இடங்களை அடையாளம் காண்பதனூடாக அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவிகளை வழங்கி, இலங்கை அரசாங்கத்தால் அமுல்படுத்தப்படுவதற்குப் பரிந்துரைகளை உருவாக்குவதே குடும்ப தேவைகள் மதிப்பீட்டின் பிரதான நோக்கமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முரண்பாட்டின் போது பாதிக்கப்பட்ட இந்தக் குறிப்பிட்டோருக்கான அரசாங்கத்தின் கொள்கைகளை அது சீராக்குவதற்கு இந்த குடும்ப தேவைகள் மதிப்பீடு நிகழ்ச்சிட்டம் உதவி வழங்கும், என கொழும்பிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் வெனல்லே பொன்ரனா தெரிவித்தார் என்று கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுலாகத்திற்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம் அறிவித்துள்ளது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் காணாமற் போனோர் பட்டியலின் பிரதிநிதித்துவ மாதிரியை ஆரம்பத்தில் கொண்டிருக்கவுள்ள இந்தக் கணக்கெடுப்பு, பூர்த்தியடைவதற்கு ஒரு வருடம்வரை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் அறிக்கையொன்றை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அரசாங்கத்திடம் வழங்கவுள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் 9.48, 9.50ஆம் பரிந்துரைகளுக்கு அமைவாக, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து, காணாமற் போனதாகக் குறிப்பிடப்படும் விடயம் தொடர்பாக இணைந்து செயற்பட்டு வருகிறது.

ஏனைய நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறை முறைமைகளைப் படித்தலை இது உள்ளடக்குகிறது. காணாமற் போனதாகக் குறிப்பிடப்படும் நபர்களின் குடும்பங்களுக்குக் காணப்படும் பிரச்சினைகள் குடும்ப தேவைகள் மதிப்பீட்டின் கண்டுபிடிப்புகளை அமுல்படுத்தும் பொறிமுறையொன்றினூடாகத் தீர்த்துவைக்கப்படும்.

மேலதிகமாக, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரை 9.51 ஆனது, காணாமற் போனோர் சம்பந்தமான அனைத்துத் தகவல்களையும் ஒன்றிணைத்து, தேசிய மட்டத்தில் தரவுச் சேகரிப்பு மைய கட்டகமொன்றின் அமுலாக்கத்திற்கு அறிவுரை வழங்குகிறது. காணாமற் போனாரின் குடும்பங்களின் தேவைகள் தொடர்பாக விவரமான பார்வையொன்றை வழங்குவதனூடாக இந்தப் பரிந்துரையை நிறைவுசெய்வதற்கு குடும்ப தேவைகள் மதிப்பீடு உதவும்.

காணாமற் போனோரின் குடும்பங்களை சமூகத்தில் சிறப்பாக ஒருங்கிணைப்பதற்கு உதவும் முகமாக அதிகாரிகள் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் முழுமைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டமாக குடும்ப தேவைகள் மதிப்பீடு அமையும். வெவ்வேறான தேவைகள் நிறைவுசெய்யப்படக்கூடியதாக சமூகங்களுக்கும், அரசாங்கத்திற்குமிடையே ஐக்கிய வலையமைப்பொன்றைக் கட்டியெழுப்பும்.

குடும்ப தேவைகள் மதிப்பீட்டிற்கான முன்மொழிவு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை செஞ்சிலுவை அமைப்பு ஆகியவற்றினால் இவ்வருட ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அமுல்படுத்தலைக் கண்காணிப்பதற்குப் பொறுப்பாகவுள்ள ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த முன்மொழிவை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டமை குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மிகவும் மகிழ்வடைகிறது, எங்களது சிறந்தளவைச் செய்வதற்கு நாங்கள் எதிர்பார்ப்புடன் காணப்படுகிறோம் என பொன்ரனா தெரிவித்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts