Ad Widget

காணாமற்போனோர் தினமான இன்று வவுனியாவில் திரண்ட மக்கள்!

காணாமல்போன உறவுகளைக் கண்டுபிடித்து தருமாறு கோரி பேரணியும் மாபெரும் பொதுக் கூட்டமும் இன்று சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

சர்வதேச காணாமற்போனோர் தினமான இன்று வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் காணாமல்போனோரின் உறவுகளை ஒன்றிணைத்து இந்த கவனயீர்ப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.

missing

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு பிரஜைகள் குழுக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் முன்னதாக காலை 9.30 மணிக்கு வவுனியா பஸ் நிலையத்தில் இருந்து வவுனியா நகரசபை நோக்கி உறவுகள் பேரணியாகச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து நகரசபை மண்டபத்தில் பொதுக் கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டு ஜனாதிபதிக்கும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுளள்து.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பிர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும், வடக்கு மாகாண அமைச்சர்களான பா.டெனீஸ்வரன், ப.சத்தியலிங்கம், உறுப்பினர்களான அனந்தி சசிதரன், து.ரவிகரன், எஸ்.சிவமோகன், தியாகராசா, இந்திரராசா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related Posts