Ad Widget

கபாலி சாதனையை முறியடிக்குமா 2.O?

இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய எந்திரன் படம்தான் 250 பட்ஜெட்டில் தயாராகி, அதிக பட்ஜெட்டில் தயாரான முதல் படமாக இருந்தது. ஆனால் அதையடுத்து ராஜமவுலி பாகுபலி படத்தை 300 கோடியில் இயக்கிய ஷங்கரின் சாதனையை முறியடித்தார்.

rajini

ஆனால் தற்போது ரஜினி நடிப் பில் ஷங்கர் இயக்கி வரும் 2.ஓ படம் 350 கோடியில் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மட்டுமே 100 கோடியை ஒதுக்கியிருக்கிறார்கள். அந்த வகையில், இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் தயாரான படப்பட்டியலில் முதலிடம் பிடிக்கப்போகிறது இப்படம்.

மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகி வரும் 2.ஓ படம் 2017-ம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாக திட்டமிடப் பட்டுள்ள நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வருகிற செப்டம்பர் மாதம் வெளியிட முடிவு செய்திருக்கிறாராம் ஷங்கர்.

இந்த படத்தில் ரஜினியுடன் மோதும் வில்லனாக அக்சய்குமாரும் நடித்திருப்பதால் ஏற்கனவே ரஜினியின் கபாலி படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் செய்த சாதனையை விட இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

Related Posts