Ad Widget

கண்ணிவெடி அகற்றிய காணிகளில் வெடிபொருட்கள்! : முதலமைச்சரிடம் முறையிட்ட மக்கள்

மாதகல் மேற்கு பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றப்பட்டு மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் வெடிபொருட்கள் காணப்படுவதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ். சமுக செயற்ப்பாட்டு மையத்தினால் மாதகல் மேற்கு கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட போது நோக்கு மண்டபத்தை திறந்து வைத்து கிராம மக்களிடம் முதலமைச்சர் குறைகளை கேட்டறிந்த போதே இவ்வாறு தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:-

குறித்த பிரதேசத்தில் ஹலோ ரெஸ்ட் நிறுவனத்தினால் கடந்த 2002 ஆம் ஆண்டு கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் இடம் பெற்று முடிவடைந்ததும், மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் அப்பிரதேசங்களில் ஆங்கங்கே வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் காணப்பட்டு குறித்த வெடிபொருட்கள் அகற்றும் நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்ட பின்னர் அவை அகற்றப்பட்டுள்ளன.

இதனால் குறித்த பகுதியினுள் நடமாட பிரதேச வாசிகள் பயம் அடைந்துள்ளதால் அவற்றை சிறந்த முறையில் அகற்றி பாவனைக்கு தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் குறித்த பிரதேசத்தில் அஞ்சல் அலுவலகம் ஒன்று அமைத்துத் தருமாறும், விவசாய மேற்கொள்வதற்கு ஏற்றதாக கடல் நீர் உட்புகாதவாறு ஆணை அமைத்துத்தருமாரும் கேட்டுக்கொண்டனர்,

அதற்கு பதிலளித்த முதலமைச்சர் கண்ணிவெடிகள் தொடர்பில் கூடிய கவணம் எடுத்துக்கொள்வதாகவும், ஏனைய விடையங்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை தயாரித்து அவற்றிக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

Related Posts