Ad Widget

கட்டாய விஞ்ஞான பாடமாக 10 ஆம் தரத்திலிருந்து பாலியல் கல்வி!

Sex-Educationபாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பிலிருந்து பாலியல் கல்வி இனிமேல் கட்டாய விஞ்ஞான பாடமாகப் போதிக்கப்படும்.

கல்வி மற்றும் சுகாதார அமைச்சு இதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவித்தன.

தற்போது மாணவர்களுக்கு சுகாதார பாடத்தில் ஓர் அம்சமாக சில விடயங்கள் போதிக்கப்படுகின்றன. மனித உயிர்ப்பெருக்க முறைமை, உடலியல் தொழிற்பாடு ஆகிய ரீதியில் மட்டுமே இதுவும் போதிக்கப்படுகின்றது. மேலும் நாற்பது வீதமான மாணவர்கள் மட்டுமே சுகாதார பாடத்தைக் கற்கின்றார்கள்.

இந்தப் பின்புலத்திலேயே பாலியல் பற்றிய விஞ்ஞான அறிவை சகல மாணவருக்கும் ஊட்டும் விதத்தில் அதனைக் கட்டாய விஞ்ஞான பாடமாகக் கொண்டுவருவது பற்றிச் சிந்திக்கப்படுகின்றது எனக் கூறப்படுகின்றது.

இளம் வயதினரிடையே பாலியல் நெருக்கம், பதின்ம வயதுக் கர்ப்பம், எய்ட்ஸ் நோய்ப் பரவல், தொற்று நோய்கள் எனப் பல பிரச்சினைகள் தீவிரமடைந்து வருவதால் அவற்றைத் தடுக்கும் எண்ணத்துடனேயே மாணவர்களுக்குப் போதிய அறிவு, முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல், தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை பற்றிய விளக்கங்களைத் தரும் நோக்குடன் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றதாம்.

எய்ட்ஸ் மற்றும் பாலியல் தொற்று நோய்கள் தடுப்புத் திட்டத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இத்தகவல்களை வெளியிட்டுள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Related Posts