Ad Widget

கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

யாழ்.மாவட்டப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் யாழ்.மாவட்டச் செயலக அலுவலகம் முன்பாக இன்று திங்கட்கிழமை (26) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.

PHI-Arpaddam

பிரதேச சபைகளின் கீழ் பணியாற்றிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களை சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

யாழ்.மாவட்டச் செயலகத்தின் இன்று (26) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெற்று வருவதால் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு வருபவர்களின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோகங்களுடன் இந்தப் போராட்டம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது, ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு வந்தவர்களிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களினால் வழங்கப்பட்டன.

இருந்தும், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குறித்த மகஜரினை வாங்காமல் வாகனத்தில் இருந்தபடியே மாவட்டச் செயலகத்திற்குள் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நல்லூர், உடுவில், தெல்லிப்பளை மற்றும் சங்கானை ஆகிய பிரதேச சபைகளின் கீழ் பணியாற்றிய பணியாளர்கள் பொதுச் சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே மேற்படி சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்படி பிரதேச சபைகளின் கீழ் பணியாற்றிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களிற்கு காடர் (வேலை செய்வதற்கான அனுமதி) இல்லாத காரணத்தினாலேயே அவர்கள் சுகாதாரத் திணைக்களத்தில் கீழ் வடமாகாண ஆளுநர் சந்திரசிறியினால் மாற்றப்பட்டனர்.

எனினும் அவர்களை மீண்டும் பிரதேச சபைகளின் மாற்றுமாறு தெரிவித்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக வெளிக்களப் பணிப்பகிஷ;கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் பிரச்சினைகள் தொடர்பான விடயம் இன்று (26) ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related Posts