Ad Widget

ஒரு அங்குலம் நிலத்தினை கூட இராணுவம் அபகரிக்க அனுமதிக்க முடியாது – ஐங்கரநேசன்

Ministerபொதுமக்களின் ஒரு அங்குலம் நிலத்தினை கூட இராணுவம் அபகரிக்க அனுமதிக்க முடியாது’ என வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

அச்சுவேலி இராச வீதியில் இராணுவ முகாம் அமைப்பதற்காக 53 ஏக்கர் காணிகள் சுவிகரிப்பதற்கான நிலஅளவை செய்தபோது, அதனைத் தடுத்து நிறுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

‘அச்சுவேலியில் படையினரின் துணையோடு நிலஅளவையாளர்கள் அளக்கவிருந்த காணி 9 குடும்பங்களுக்கு சொந்தமானது. அவர்கள் பலகாலத்திற்கு முன்னர் இக்காணிகளில் இருந்து விரட்டப்பட்டு வேறு இடங்களில் பல அல்லல்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள்.

பொதுமக்களின் ஒரு அங்குலம் எனும் நிலத்தினை கூட இராணுவம் அபகரிப்பதை அனுமதிக்க முடியாது. பொதுமக்களின் காணிகள் மாத்திரம் அல்ல அரச காணிகளாக இருந்தாலும் அந்த காணிகளில் இராணுவம் நிலைகொண்டு இருப்பது அப்பிரதேச மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன், பல்வேறு விதங்களில் அசௌகரியங்களை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றன.

எனவே படையினர் அவ்வாறான பொதுக் காணிகளில் இருப்பது கூட ஏற்றுக்கொள்ள முடியாது. அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

 

தொடர்புடைய செய்திகள்

சாவகச்சேரியிலும் மக்கள் போராட்டம்!

நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக அச்சுவேலியில் போராட்டம்!

Related Posts