யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (25) மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இனம் தெரியாத நபர்கள் தாக்கிவிட்டு அவரிடமிருந்த ரூ.20 ஆயிரம் பணத்தினைத் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தினால் காயமடைந்த சிவசுப்பிரமணியம் சுதர்ஸன் (32) என்ற நபர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.