Ad Widget

எதிர்வரும் 12ம் தேதி விஜய்யின் பைரவா ரிலீஸ்

தெறி படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛பைரவா’. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சதீஷ் முக்கிய ரோலில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ‛அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்புகள் முடிந்து, இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில தினங்களில் பாடல்கள் வெளியாக உள்ளது.

bairavaa

அழகிய தமிழ் மகன் போன்று பைரவா படத்திலும் விஜய்யை இரண்டு வேடங்களில் நடிக்க வைத்திருக்கிறாராம் இயக்குநர் பரதன். ஒருவர் கிராமத்து பின்னணியிலும் மற்றொருவர் நகரத்து பின்னணியிலும் வாழ்வது போன்ற அவர்கள் கேரக்டர் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடத்தில் அதிக வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பைரவா படம் பொங்கலுக்கு வெளியாகும் என முன்னரே அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது பைரவா படம் பொங்கலுக்கு இருதினங்கள் முன்னதாகவே அதாவது, ஜன., 12-ம் தேதியே வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

Related Posts