எங்கே போகிறார் சம்பந்தன்? -சுரேஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எந்த இலக்கை நோக்கி பயணிக்கிறார் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வு காணப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைபின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்டது.

குறித்த யோசனை வடமாகாண சபை மற்றும் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்டங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளை குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிப்பதாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பதில் எந்தவித நியாயமும் இல்லை.

இதனால் சம்பந்தன் எந்த இலக்கை நோக்கி பயணிக்கின்றார் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராகவோ அல்லது சம்பந்தனுக்கு எதிராகவே யாரும் செயற்படவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts