Ad Widget

உழவு இயந்திரங்களின் விபரங்கள் வாசிக்கப்பட்டன

கடந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் முரண்பாட்டினை ஏற்படுத்தி, கடந்த காலத்தில் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் எங்கே என்ற கேள்விக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது.

78907

வடமாகாண கமத்தொழில் திணைக்கள ஆனையாளர் பற்றிக் நிறைஞ்சனுடைய தகவலினை இணைத்தலைவர்களில் ஒருவரான பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில்அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாசித்துக் காட்டினார்.

அதன்படி, இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 109 உழவு இயந்திரங்களில், நெடுந்தீவு, ஊர்காவற்துறை, வேலணை, காரைநகர் ஆகிய பிரதேச சபைகளுக்கு தலா ஒவ்வொரு உழவு இயந்திரங்களும், யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 05 உழவு இயந்திரங்களும், பனை அபிவிருத்திச் சபைக்கு 4 உழவு இயந்திரங்களும் வழங்கப்பட்டதுடன், மிகுதி 96 உழவு இயந்திரங்களும் கமத்தொழில் திணைக்களங்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

Related Posts