Ad Widget

உள்ளக விசாரணையில் தடை செய்யப்பட்டோர் சாட்சியமளிக்க முடியாது,ஆணைக்குழுவின் தலைவர்

missing-people-presidentபோர்க் குற்றம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணைகளில், இலங்கை அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களோ, தடை செய்யப்பட்ட நபர்களோ சாட்சியமளிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார் உள்ளக விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ் வெல் பராக்கிரம பரணகம.

காணாமற் போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விடயப்பரப்புக்கள், கடந்த மாதம் 15 ஆம் திகதி விடுக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் விரிவுபடுத்தப்பட்டது.

இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்ற மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பிலும் விசாரணை மேற்கொண்டு ஆணைக்குழு அறிக்கையிட வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

அதற்கமைய இந்த ஆணைக் குழுவுக்கு ஆலோசனை வழங் குவதற்கு, மூன்று சர்வதேச நிபுணர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வால் நிய மிக்கப்பட்டிருந்தனர். ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம, விரிவுபடுத்தப்பட்ட ஆணைக்குழு அதிகாரங்களுக்கு அமைய முன்னெடுக்கப்படவுள்ள போர்க் குற்ற விசாரணையில் புலம்பெயர் தமிழர்களும் சாட்சியமளிக்க முடியும் என்று தெரிவித்திருந்தார்.

இலங்கை அரசால், கடந்த மார்ச் மாதமளவில் புலம் பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்பட்டு வரும் 16 அமைப்புக்களும், 424 தனிநபர்களும் தடைசெய்யப்பட்டவர்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டனர்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் தனிநபர்களும், அமைப்புக்களுமே இலங்கை அரசால் இவ்வாறு தடை செய்யப்பட்டது. அவ்வாறு தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் அல்லது தடை செய்யப்பட்ட நபர்கள்,

இலங்கையின் உள்ளக போர்க் குற்ற விசாரணையின் போது சாட்சியமளிக்க முடியுமா என்று ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகமவிடம் வினவியபோது,,

அதற்கு அவர், “அரசு தடை செய்திருந்ததென்றால் சாட்சியம் வழங்க முடியாது தான். அப்படியயன்றுதான் நானும் நினைக்கின்றேன்’ என்று பதிலளித்தார்.

அதேவேளை, இலங்கை அரசின் உள்ளக விசாரணை சர்வதேசதரம் வாய்ந்ததாக அமைய வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை அலுவலகம் உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

Related Posts