Ad Widget

உத்தம வில்லனில் ஆறு பாடல்களைப் பாடியுள்ள கமல் ஹாஸன்!

உத்தம வில்லன் படத்தின் 7 பாடல்களில் ஆறு பாடல்களை கமல் ஹாஸனே பாடியுள்ளார். இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில், நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் படம் ‘உத்தம வில்லன்’.

kamal-parthiban34

இதில் கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜா குமார் நடிக்கின்றனர். இவர்களுடன் இயக்குனர்கள் கே.பாலசந்தரும், கே.விஸ்வநாத்தும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

‘உத்தம வில்லன்’ திரைப்படத்தில், ‘உத்தமன்’ என்ற 8-ம் நூற்றாண்டு கூத்துக் கலைஞன் கதாபாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21-ம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு கதாபாத்திரத்திலும் என இரு வேடங்களில் நடிக்கிறார் கமல் ஹாசன்.

இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். உத்தம வில்லன் திரைப்படம் ஏப்ரல் 2ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்ட திரையுலகினர் பலர் கலந்து கொண்டனர். உத்தம வில்லன் படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஐந்து பாடல்களை கமல் எழுதியோடு மட்டுமல்லாமல் 6 பாடல்களை பாடவும் செய்துள்ளார்.

1. லவ்வா லவ்வா எனும் பாடலை விவேகா எழுத கமல் ஹாசன், சரண்யா கோபிநாத், அனித்தா, நிவாஸ் பாடியுள்ளனர்.

2. காதலாம் கடவுள் முன்… எனும் பாடலை கமல் ஹாசன் எழுத பத்மலதா பாடியிருக்கிறார். இந்துஸ்தானி இசை பாணியில் அமைக்கப்பட்டுள்ள பாடல் இது.

3. உத்தமன் அறிமுகம்(வில்லுப்பாட்டு) எனும் பாடலை கலைமாமணி கவிஞர் சுப்பு ஆறுமுகம் எழுத கமலும், சுப்பு ஆறுமுகமும் பாடியுள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு வில்லுப்பாட்டு கலையின் பிரதான கலைஞரான சுப்பு ஆறுமுகத்தின் குரல் திரையிசையில் ஒலிக்கும் பாடல் இது.

4. சாகாவரம் எனும் பாடலை கமல் ஹாசன் எழுதி அவரே பாடியுள்ளார். உடன் யாஸின் நிஸார், ரஞ்சித் மற்றும் ஜிப்ரான் பாடியுள்ளனர்.

5. இரணியன் நாடகம் எனும் பாடலை கமல் ஹாசன் எழுத ருக்மிணி அசோக் குமுர், கமல் ஹாசன் ஆகியோர் பாடியுள்ளனர்.

6. முத்தரசன் கதை எனும் பாடலை கமல் ஹாசன் எழுத யாசின் நிசார், ரஞ்சித், ஐயப்பன், பத்மலதா, கமல் ஹாசன் பாடியுள்ளனர்.

7. உத்தமன் கதை எனும் பாடலை கமல் ஹாசன் எழுத எம்.எஸ். பாஸ்கர், யாசின் நிசார், ரஞ்சித், ஐயப்பன், கமல் ஹாசன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். படத்தின் ஏழு பாடல்களுமே, மிக வித்தியாசமாக, கேட்பவர்களுக்குப் புதிய அனுபவம் தரும் பாடல்களாக உள்ளன.

Related Posts