ஈபிடிபி அலுவலகத்திற்கு முன்னால் சுகாதார தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்.பிராந்திய சுகாதார பணிமனைக்கு கீழ் பணிபுரியும் சமூக சுகாதார தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் கோரி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தலைமைச் செயலகத்திற்கு முன்னால் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறிப்பாக தாம் பல வருடகாலமாக சுகாதார தொண்டர்களாக ஆறாயிரம் ரூபாவுக்கு வேலை செய்து வருகின்றோம். அமைச்சே எமக்கு நிரந்தர நியமனம் வேண்டும்,எங்களுக்கு சரியான தீர்வு வேண்டும் என்று கையில் சுலோகத்தை ஏந்தியவாறு அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts