Ad Widget

இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக யாழ். மாநகர சபையில் தீர்மானம்

jaffna_municipalஇஸ்ரேலினால் பலஸ்தீனத்தின் காஸா மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை கண்டித்தும் அதனை நிறுத்தக்கோரியும் கண்டனத் தீர்மானம் ஒன்று யாழ். மாநகர சபையில் ஏகமனதாக நேற்று வியாழக்கிழமை (31) நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகர முதல்வர் தலைமையில் மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது, மாநகர சபை ஆளுங்கட்சி (ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) உறுப்பினர் மொஹமட் மீராசாஹீப் முஸ்தபாவினால் மேற்படி கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்தக் கண்டனத் தீர்மானத்தை முன்வைத்து முஸ்தபா உரையாற்றுகையில்,

இஸ்ரேலின் தாக்குதலினால் தினமும் பல சிறார்களும், அப்பாவி பொதுமக்களும் படுகொலை செய்யப்படுகின்றனர். இதற்கு எதிராக பல நாடுகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே, இஸ்ரேலின் போர் விமானங்களின் குண்டு வீச்சுக்களை நிறுத்தக் கோரி இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இதனை சபை உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.

இதன்போது, உரையாற்றிய எதிர்க்கட்சி (த.தே.கூ) உறுப்பினர் நடராசா இராஜதேவன், இந்தக் கண்டனத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்கின்றோம்.
இதேபோல், வடக்கில் இடம்பெறும் காணி சுவீகரிப்புத் தொடர்பாக கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தால் இந்தச் சபை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Related Posts