Ad Widget

இலங்கை ஒத்துழைப்புத் தராதமை பற்றி ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலில் கவலை தெரிவிப்பு

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் இலங்கை தொடர்பாக நடத்தும் விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காதமை குறித்து கவுன்ஸிலின் சார்பில் கவலை தெரிவிக்கப்பட்டது.

Flavia Pansieri cdf un

இலங்கை விசாரணை தொடர்பாக கவுன்ஸிலின் நேற்றய அமர்வில் ஆணையாளர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட வாய்மூல அறிக்கையிலேயே இந்தக் கவலை வெளியிடப்பட்டது.

ஐ.நா. வின் புதிய மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கை வெளிவிவகார அமைச்சர் சந்தித்தார் எனவும் விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும் ஐ.நா. அலுவலகத்துக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார் எனவும் பதில் பிரதி ஆணையாளர் பிலேவியா பன்சியர் தெரிவித்துள்ளார்.

வாய்மூல அறிக்கையை புதிய மனித உரிமை ஆணையாளருக்குப் பதிலாக பிரதி ஆணையாளர் பிலேவியா பன்சியர் சமர்ப்பித்து உரையாற்றினார். அதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காததை கவலை அளிக்கும் விடயம் என தெரிவித்த அவர், இலங்கையில் புதிதாகப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றைத் தோண்டும் மற்றும் விசாரிக்கும் நடைமுறைகள் மெதுவாக இருக்கின்றன எனவும் தெரிவித்தார். இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சிகளைப் பாதுகாப்பது தொடர்பான சட்டமூலம் குறித்து கரிசனைகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts