Ad Widget

இலங்கை – இந்தியாவை இணைக்க ஆசிய அபிவிருத்தி வங்கியில் நிதி உதவி

இலங்கை – இந்தியாவை இணைத்து அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வீதிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியில் நிதிஉதவி பெற எதிர்பார்த்துள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

ராமேஸ்வரம் இலங்கை இடையே 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பாலம் அமைக்க ஆய்வுகள் நடைபெற்றுவருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

மதுரை- பரமக்குடி, ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பேசிய அவர்,

ராமேஸ்வரம் இலங்கை இடையே பாலம் அமைக்க ஆய்வுகள் நடைபெற்றுவருவதாகவும் இதற்காக உலக நிதி அமைப்பு 23 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்க சம்மதித்துள்ளதாகவும் கூறினார்.

இதில், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக நெஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

Related Posts