Ad Widget

இலங்கை அரசு தமிழர்களிற்கு சமவுரிமை வழங்கவேண்டும் – மோடி

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமை, நீதி, சுயமரியாதை ஆகியவற்றுகு இலங்கை அரசு முழு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் முதன்மை தமிழ் அரசியல் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவிடம் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

modi1_tna

“ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர்களுக்கு சம உரிமை, நீதி, கவுரவம் மற்றும் சுயமரியாதை ஆகியவற்றிற்கு இலங்கை அரசு உத்திரவாதம் அளிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பினரும் கூட்டுறவு உணர்வு மற்றும் பரஸ்பர ஏற்புடைமை ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து செயல்பட்டு அரசியல் தீர்வு காண வேண்டும் என்று மோடி கூறியுள்ளார்” என்று மோடியின் அதிகாரபூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவையெல்லாம் அரசியல் சாசனம் 13ஆம் சட்டத்திருத்ததின்படி நடக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தியது மிக முக்கியமான ஒன்றாக அவ் அறிக்கையில் குறித்துக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகள், மறுவாழ்வு, மற்றும் மறுகட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்தும் என்று மோடி உறுதியளித்துள்ளதாக தமிழர் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

இன்றைய சந்திப்பின் போது, பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலர், நிருபேந்திர மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங் ஆகியோர் இருந்தனர்.

Related Posts