Ad Widget

இலங்கையை ஆக்கிரமித்துள்ள கொரோனா – நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை!!

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

அதற்கமைய அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு இவ்வாறு விசேட உரையாற்றவுள்ளாரென ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான 8 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், நேற்று மேலும் 10 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்களின் நலன் கருதி இலங்கையில் எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் பொது விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதுமட்டுமல்லாது, கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் தற்போது பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்விசார் நிறுவனங்களுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சினிமா திரையரங்குகள், சுற்றுலாத் தளங்கள், பூங்காக்கள் என்பன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

அதேபோன்று, மத வழிபாடுகளுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அந்தந்த மதத் தலைவர்கள் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts