இலங்கையில் பேஸ்புக் குறித்த முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் பேஸ்புக் தொடர்பாக கிடைக்கின்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக கணனி துரித நடவடிக்கைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டில் பேஸ்புக் தொடர்பில் 650 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த பிரிவின் சிரேஷ்ட, தகவல் தொழில் நுட்பப்பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார். போலியான பேஸ்புக் கணக்குகள் தொடர்பிலேயே அதிகளவு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு ஒருவருடைய நிழற்படத்தைப் பயன்படுத்தி மற்றுமொருவர் போலி கணக்கு திறந்துள்ளமை தொடர்பாக தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் கணனி துரித நடவடிக்கைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இப்படியான சந்தர்ப்பங்களில் பேஸ்புக் நிறுவனத்திற்கு முறைப்பாடு செய்வதன் மூலம் போலிக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

இலங்கை கணனி துரித நடவடிக்கைப் பிரிவிற்கு முறைப்பாடு செய்வதன் ஊடாகவும் உரிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என கணனி துரித நடவடிக்கைப் பிரிவின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts