Ad Widget

இலங்கையின் பாரம்பரிய கல்வி முறைமை வேலையற்ற பட்டதாரிகளையே உருவாக்குகிறது!

இலங்கையின் பாரம்பரியமான கல்வி முறைமை வெறுமனே வேலையற்ற பட்டதாரிகளையே உருவாக்குவதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இந்தக் கல்வி முறைமையில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டியது அவசியமானது என்றும் கூறியுள்ளார்.

ala_dalas-alka-paruma

கல்விக்கான நிதியொதுக்கீட்டை 6% மாக உயர்த்தவேண்டும் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் கோரிக்கை விடுக்கின்றபோதிலும், வெறுமனே வேலையற்ற பட்டதாரிகளே இந்தப் பாரம்பரிய கல்வி முறைமையின்மூலம் தோற்றுவிக்கப்படுகின்றனர் என்றும் இளைஞர் விவகார மற்றும் திறன்விருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கல்வி முறைமையில் குறிப்பிடத்தக்களவு மாற்றத்தைக் கொண்டுவரவேண்டியதே இப்போது அவசியமானது என்றும் தெரிவித்துள்ள அவர், பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் குறிப்பிடுவதுபோல் கல்விக்கான நிதியொதுக்கீட்டை அதிகரிப்பதல்ல இப்போது அவசியமான விடயம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Unemployed Graduates Demons 1பாரம்பரிய கல்வி முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படாவிட்டால் கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் பதாகைகளைத் தாங்கியவாறு கோஷம் எழுப்பும் கூட்டங்களே தொடர்ந்து உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மன் தொழில்நுட்ப நிறுவனத்தின் பயிற்றுவிப்பாளர்களுக்கான களப்பயிற்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இந்தக் கருத்துக்களை வெளியிட்ட அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இலங்கையின் முக்கியமான ஒரு காலகட்டத்தில் தான் திறன்விருத்தி அமைச்சராக இருப்பதையிட்டுப் பெருமைப்படுவதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts