Ad Widget

இலங்கைக்கு எதிராக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் 103 படகுகளை விடுவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் இன்று (01) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கச்சத்தீவு பகுதியில் பாரம்பரிய மீன்பிடி உரிமை பெறுவது குறித்து நேற்று ராமேசுவரத்தில் மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையில் உள்ள 103 தமிழக மீனவர்களின் விசை படகுகளை உடனே விடுவிக்க வேண்டும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 4 மீனவர்களை விடுவிக்க வேண்டும், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி உரிமையை பெற்று தர வேண்டும், இதற்காக இந்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுபடுது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனால் சுமார் 1000 இற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், ராமேசுவரம் துறைமுக வெறிச்சோடி காணப்படுவதாகவும் தமிழக ஊடக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

Related Posts