Ad Widget

இரத்த வங்கியின் அலட்சியம்; யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு

Give-Blood-Give-Lifeகுருதிக்கொடையாளர்களை அவமதித்து அலட்சியம் செய்ததால் யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவு தற்போது குருதித் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருவதாக தெரிவந்துள்ளது.

குருதிக் கொடையாளர்கள் பண்டிகைகளிலோ மற்றும் வேறு நினைவு தினங்களிலும் இரத்த வங்கிக்கு சமூகம் அளித்து குருதித் தானம் செய்வது வழமை.

இந் நிலையில் முள்ளிவாய்க்கால் போன்ற நினைவுதினங்களில் வரும் குருதிக் கொடையாளர்களை திட்டமிட்டு இரத்த வங்கியினர் போதியளவு குருதி உள்ளதாக தெரிவித்து திருப்பி அனுப்புகின்றனர்.

இதற்கான காரணம் தாங்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் இருந்து போதியளவு குருதியை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் எல்லா இரத்த வகைகளுக்கும் தற்போது தட்டுப்பாடு நிலவுவதால் குருதிக் கொடையினை செய்யுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

எனவே தற்போது குருதித் தட்டுப்பாடு நிலவுவதாக அறிவித்துள்ளமை வேடிக்கையாகவுள்ளதுடன் ஏன் மீண்டும் அநுராதபுர வைத்தியசாலையில் குருதியை பெற்றுக்கொள்ள முடியாதா? என குருதிக்கொடையாளர்கள்,நோயளர்கள் எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Posts