Ad Widget

இயற்கைக்கு மாறான அரசாங்கமாக காண்பிக்க முயல்கின்றனர் – அங்கஜன்

இந்த அரசாங்கத்தை திட்டமிட்டு குறை கூற வேண்டும் என்பதற்காக இயற்கைக்கு மாறான அரசாங்கமாக காண்பிக்க முயல்கின்றனர் என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், நாடாளுமன்ற பிரதி குழுக்களின் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஆறுகளை பாதுகாப்புாம் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “யாழ் மாவட்டத்தை பொறுத்தவரையில் நதிகளே இல்லாத ஒரு பிரதேசமாக காணப்படுகின்றது. ஆனால் வடக்கு மாகாணத்தில் ஏனைய மாவட்டங்களில் ஆறுகள் நதிகள் காணப்படுகின்றன. இவை இப்போது உள்ள அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுகின்றது. இந்த அரசாங்கத்தை திட்டமிட்டு குறை கூற வேண்டும் என்பதற்காக இயற்கைக்கு மாறான அரசாங்கமாக காண்பிக்க முயல்கின்றனர்.

ஆனால் இந்த அரசாங்கம் இவ்வாறு இயற்கை வழங்களை பாதுகாப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்த வருகின்றது. அதன் ஒரு அங்கமாகவே இங்கு இன்று இந்த நிகழ்வ அமைந்துள்ளது. எமது பிரதேசத்தை பொறுத்தவரையில் பொதுமக்களின் விவசாயம் செய்த மற்றம் செய்யக்கூடிய காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வே்ணடும் என ஜனாதிபதியிடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

இங்குள்ள மாவட்ட மக்கள் விவயாயத்தை முன்னெடுத்த வருகின்றனர். ஏனைய பகுதிகளில் இவ்வாறு விவசாயம் செய்யப்பட்ட காணிகளை விடுவிப்பது போன்று இங்கும் காணிகளை விடுவிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தான் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Related Posts